தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில்இறால் வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இறால் வளர்ப்பு பயிற்சி வருகிற 22-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ப.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் 'இறால் வளர்ப்பு' குறித்த ஒரு நாள் பயிற்சி வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இந்த பயிற்சியில் இறால் மீன் வளர்ப்பின் முக்கியவத்துவம், இந்தியாவில் இறால் மீன் வளர்ப்பின் தற்போதைய நிலை, இடம் தேர்வு, இறால் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள், தீவனம் அளித்தல், அறுவடை செய்த இறால்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும், இறால் மீன் வளர்ப்பு குறித்த காணொலி காட்சித் தொகுப்பும் காண்பிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்லூரியின் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் 21.6.2023 மாலை 5 மணிக்குள் செல்போன் மூலமாக அல்லது பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி 628008, செல்போன் எண் 9442288850, மின் அஞ்சல்: athithan@tnfu.ac.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.