திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7¾ லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7¾ லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது அவரது காலணியில் மறைத்து வைத்து ரூ.7 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.