திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் - நாளை நடக்கிறது

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2023-09-10 20:50 GMT


திருப்பரங்குன்றம் தாசில்தார் அனீஸ் சத்தார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்