திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு நடத்தினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் நேற்று பக்தர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வழக்கமான அலுவல் பணிகள் குறித்தும் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணியுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவில் மின்பகிர்மான அலுவலகம், நாழிக்கிணறு கார் பார்க்கிங், நாழிக்கிணறு, முடிகாணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர், பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். ஆய்வின் போது, விடுதி மேலாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன், பணியாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் அவர் சொந்தஊரான அடையலுக்கு சென்றார். அங்கு அவருக்கு முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன் முருகேசன் தலைமையில் கிராம மக்கள் வாடிவேடிக்கை முழங்க வரவேற்பு கொடுத்தனர். அனைவருக்கும் அவர் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் அங்குள்ள பெருமாள் சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.