திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கை

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-26 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலும், எம்.எஸ்சி கணிதவியல், எம்.எஸ்சி இயற்பியல், எம்.எஸ்சி கணிப்பொறியியல், எம்.காம் வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. மேற்கண்ட முதநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, முதுநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவிகள் www.gacw.in என்ற கல்லூரி இணையதளத்திலோ அல்லது கல்லூரிக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்