திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்வணிகவியல் மன்ற கூட்டம்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் மன்ற கூட்டம் நடந்தது.

Update: 2023-08-09 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 'வணிகவியலில் வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் வணிகவியல் மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்லூரி முத்லவர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ரா.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை பா.சந்திரா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாயர்புரம் போப்ஸ் கல்லூரி(தன்னாட்சி) பொருளியல் துறை உதவி பேராசிரியர் தினகரன், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கி கூறினார். 3-ம் ஆண்டு மாணவி பி.ராஜதேவி நன்றி கூறினார். கூட்டத்தில் வணிகவியல் துறை உதவி பேராசிரியைகள், இளங்கலை மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியை பா.சந்திரா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்