திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்கள் தூய்மை பணி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்.48-ஐ சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தனர். மாணவர்களின் இந்த பணியை கல்லூரி முதல்வர் மகேந்திரன், கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கவிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.