திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்இலவச பொதுமருத்துவ முகாம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இலவச பொதுமருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-02-07 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு மற்றும் ஆரோக்கிய மன்றம் சார்பில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். முகாமை உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் த.ஜிம்ரீவ்ஸ் சைலன்ட் நைட் மற்றும் ஆரோக்கிய மன்றம் இயக்குனர் செ.கவிதா வழிநடத்தினார். முகாமில் முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனைகளை நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர் அருள்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வேலாயுதம், பசுங்கிளிபாண்டியன், அபுல்கலாம் ஆசாத், லெனின், ஷோலா பெர்னாண்டோ, கணேசன், அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் உடல் பரிசோதனை ெசய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஆரோக்கிய மன்ற செயல் உறுப்பினர் பே.தீபாராணி, மன்ற மாணவச்செயலர் கு.சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்