தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில்நிலக்கரி தட்டுப்பாட்டால் 2 மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 2 மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-28 18:45 GMT

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 2 மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி வடமாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் அனல்மின்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

இந்த நிலையில் அனல்மின்நிலையத்தில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து எந்திரங்களையும் இயக்க போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று முதல் அங்கு உள்ள 3, 5-வது மின்சார உற்பத்தி எந்திரங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 எந்திரங்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இதன் காரணமாக 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்