திருமலைக்கேணி முருகன் கோவிலில்கார்த்திகை பூஜை

நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் மார்கழி மாத கார்த்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-01-03 18:45 GMT

நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் மார்கழி மாத கார்த்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்