திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில்ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை

திருச்செந்தூர்ஆதித்தனார் கல்லூரியில் ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.

Update: 2023-08-22 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை, கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு மற்றும் ஆராய்ச்சிக்குழு சார்பில் நடைபெற்றது. கல்லூரி ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார். இதில் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மற்றும் இயக்குனர் அன்னா வீனஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆராய்ச்சி செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி கூறினார். குறிப்பாக, ஒரு துறையை சார்ந்த ஆராய்ச்சியை எவ்வாறு தொடங்க வேண்டும், ஆராய்ச்சி கட்டுரைகளை சிறந்த முறையில் எழுதுவது எப்படி? அதை சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் பிரதியிடும் முறைகளையும், ஆராய்ச்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் விரிவாக எடுத்து கூறினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜீம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் நன்றி கூறினார். இப்பயிற்சி பட்டறையில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராயச்சி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்