தேனி கிறிஸ்தவ ஆலயத்தில்பங்குத்தந்தை மோட்டார் சைக்கிள் திருட்டு
தேனி கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை மோட்டார்சைக்கிள் திருடுபோனது.
தேனி மதுரை சாலையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருப்பவர் முத்து. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பங்குத்தந்தை முத்து ஆய்வு செய்த போது, அதில் மர்ம நபர்கள் 2 பேர் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன்பேரில் அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.