தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-09-18 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், உதவி கலெக்டர் மகாலட்சுமி, அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டின் வினு உட்பட காவல்துறையினர் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்