தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்தாய், மகள் திடீர் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-16 18:45 GMT

தூத்துக்குடியில் தாய், மகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா

திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த ஞானமலர் (35) என்பவர், 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் மரிய ஜெபராணியுடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அதிகாரிகள் அமர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த மேஜைக்கு முன்பாக தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து தாய் மற்றும் மகளை ஊழியர்கள் மற்றும் போலீசார் வலுக்கட்டயமாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் வாகனத்தில் அழைத்து செல்ல முயன்றனர்.

ஆனால், இருவரும் ஒருவரையொருவர் இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் செல்லும் பேட்டரி வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர்.

உதவித்தொகை

இது குறித்து தாயார் ஞானமலர் கூறுகையி்ல், நான் தனியாக கஷ்டப்பட்டு மகளை வளர்த்து வருகிறேன். அவளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளேன். அதுபோல எனது குடும்ப அட்டையை அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையாக மாற்றித் தரும்படி கோரிக்கை விடுத்தேன். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தான் தர்ணாவில் ஈடுபட்டேன் என்று கூறினார்.

பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, போலீசார் அவரை அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்