தூத்துக்குடி கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Update: 2023-04-13 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

உறுதிமொழி

அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடுப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதனை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் உறுதிமொழியை வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

இதே போன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், போலீஸ் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், மயில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்