தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப கலெக்டரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-17 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் கடந்த 4 ஆண்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு நல்ல வருமானத்தில் வேலை பார்த்தனர். அவர்கள் தற்போது ஆலை மூடப்பட்டதால் வெளியூர்களில் சென்று குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்க ஆலை திறக்கப்பட வேண்டும், எங்கள் கிராமத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படவேண்டும் எங்கள் இந்த ஆலை திறக்கப்பட்டால் எங்கள் சந்ததிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று கூறி உள்ளனர்.

சிப்காட் நிலம்

தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர் தலைமையில் அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், குமாரகிரி பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் சிப்காட்டுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் இதே போன்று சிப்காட்டுக்கு எடுக்கப்பட்ட நிலம் மீண்டும் மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று தூத்துக்குடியிலும் நிலத்தை மக்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

காலி பணியிடங்கள்

சாயர்புரத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களில் போதிய பணியாளர்கள் நிரப்பப்படாமல் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகையால் புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்