கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.37¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.37¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
கொடுமுடி
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.37¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
ஏலம்
சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 ஆயிரத்து 310 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய் 9 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 15 காசுக்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 791-க்கு விற்பனை ஆனது.
238 மூட்டைகளில் கொப்பரைத் தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 81 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 90 காசுக்கும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக 62 ரூபாய் 46 காசுக்கும், அதிகபட்ச விலையாக 79 ரூபாய் 99 காசுக்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 764-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.37¾ லட்சம்
எள்ளை விவசாயிகள் 247 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 148 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 167 ரூபாய் 99 காசுக்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 80 ஆயிரத்து 116-க்கு விற்கப்பட்டது.
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.37 லட்சத்து 73 ஆயிரத்து 671-க்கு ஏலம் போனது.