கம்பம் உழவர் சந்தையில்தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

கம்பம் உழவர் சந்தையில் பெரியகுளம் மற்றும் திருச்சி தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-12-30 18:45 GMT

கம்பம் உழவர் சந்தையில் பெரியகுளம் மற்றும் திருச்சி தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்ேபாது காய்கறி சாகுபடி, சந்தைப்படுத்துதல் குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் மாணவிகளுக்கு விளக்கினர். அப்ேபாது அதிகாரிகளுடன் மாணவிகள் கலந்துரையாடினர். மேலும் கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பார்த்திபன் மற்றும் உதவி நிர்வாக அலுவலர் சிவா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்