வேளாண் அறிவியல் மையத்தில்உலக தேனீக்கள் தின விழா

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உலக தேனீக்கள் தின விழா நடந்தது.

Update: 2023-05-21 18:45 GMT

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் உலக தேனீக்கள் தின விழா நடந்தது. அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் வரவேற்றார். அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கி பேசினார். கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் கோட்ட அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார்.

உதவி இயக்குனர் அன்புச் செல்வன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், சின்னமனூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு தொழில், தேனீ வளர்ப்பு திட்டங்கள், கடனுதவி குறித்து பேசினர். தொழில்நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். விழாவில் தேனீ வளர்ப்பில் திறம்பட செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்