தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் மகளிர் குழு, கோவில் நிர்வாகம் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொழு வைக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிப்பட்டனர். தினமும் அம்பாளுக்கு பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படும். நிறைவு நாளில் முளைபாரி எடுத்து சிறப்பு பூஜையுடன் நிறைவு பெறும்.
சாத்தான்குளம் செட்டியார் நடுத்தெரு அங்காள ஈஸ்வரி அம்மன், பழனி ஆண்டவர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், புஷ்பாஞ்சலி உள்ளிட்டவைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.