புனித அமல அன்னை ஆலயத்தில் கலைத்திறன் நிகழ்ச்சி

புனித அமல அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி - கலைத்திறன் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-30 22:19 GMT

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று மறைக்கல்வி மாணவ- மாணவிகளுக்கான கலைத்திறன் நிகழ்ச்சி நடந்தது. மாணவ- மாணவிகளின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் மனப்பாடம் செய்தல், மாறுவேட நிகழ்ச்சி, பாடல், நடனம், ஓவியம், கட்டுரை மற்றும் கதை எழுதுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்குதந்தை நல்ல ஜேக்கப்தாஸ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். மறைக்கல்வி ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்