சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,120-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,120-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.962-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.84-க்கும், பட்டுப்பூ ரூ.78-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,120-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளிப்பூ ரூ.280-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்ைதவிட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோவுக்கு 193 ரூபாய் விலை குறைந்தது. கனகாம்பரம் 300 ரூபாயும், ஜாதிமல்லி ரூ.100-ம், செவ்வந்தி ரூ.100-ம் விலை குறைந்தது. முல்லைப்பூ ரூ.120-ம் அதிகரித்தது.