சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.350-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.350-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.350-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.26-க்கும், பட்டுப்பூ ரூ.54-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.மழையோ, பனியோ இல்லாததால் பூக்கள் உற்பத்தி அதிகரித்து, மார்க்கெட்டு அதிக அளவில் கொண்டுவரப்பட்டு இருந்தன. அதனால் அனைத்து பூக்களுமே விலை குறைந்து ஏலம் போனது என்று சங்க நிர்வாகிகள் கூறினர்.