சாத்தான்குளம் தொழிற்பயிற்சி பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி
சாத்தான்குளம் தொழிற்பயிற்சி பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் சாத்தான்குளம் ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஒத்திகை பயிற்சி மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சியும் நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் வீ. மாரி யப்பன் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராஜேஷ் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் சதீஸ்குமார் வீரர்கள் தவசி ராஜ், சங்கரலிங்கம், அருள் முருகன், சுப்பிரமணியன், முத்துமாரியப்பன், வைகுண்டம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி முதல்வர், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.