சாகுபுரம் தொழிற்சாலையில் மரக்கன்று நடும் விழா
சாகுபுரம் தொழிற்சாலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் டி.சி.டபுள்யூ நிறுவனத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். தொழிற்சாலையின் துணை பொது மேலாளர் ரவிக்குமார் சுற்றுச்சூழல் பற்றி பேசினார். மூத்த பொது மேலாளர் கேசவன், வீடு மற்றும் ஆலைகளில் தண்ணீர் சிக்கனம் மற்றும் பயன்பாடு முறைகள் பற்றி பேசினார். ஆலை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை தொழிற்சாலை பொது ஜன தொடர்பு துறை மற்றும் சிவில் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகியோர் செய்திருந்தனர்.