ரூ.37.75 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஏரல் அருகே வாழவல்லானில் ரூ.37.75 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஏரல்:
ஏரல் அருகே வாழவல்லானில் ரூ.37.75 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய தார் சாலை
ஏரல் அருகே உள்ள வடக்கு வாழவல்லானில் இருந்து கீழ வாழவல்லான் வரை ரூ.37.75 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி, சாலை அமைக்கும் பணியினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் கழகச் செயலாளர் ராயப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் எடிசன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், யூனியன் கவுன்சிலர் பாரத், ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி, ஸ்ரீவைகுண்டம் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர், சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளர் தனலட்சுமி, சாலை பணியாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சலவைக்கூடத்தை புதுப்பிக்கும் பணி
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பராங்குசநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடத்தில் சலவைக்கூடத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.20 லட்சம் ஒதுக்கினார். இதனையடுத்து சலவைக் கூடத்தை புதுப்பிக்கும் பணிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் எடிசன், வெள்ளூர் அலங்கார பாண்டியன், சீனி ராஜேந்திரன், பொதுகுழு உறுப்பினர் தாசன், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், நகரத் தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயணிகள் நிழற்குடை
சாத்தான்குளம் யூனியன் கொம்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வகுப்பிலான்குளம் கலுங்குவிளையில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பயணியர்கள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் பீரெனிலா போனிபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனி பாஸ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவப்பிரிவு டாக்டர் ரமேஷ் பிரபு, வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி, மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் சுடலையாண்டி நன்றி கூறினார்.