ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டன.

Update: 2023-07-28 21:35 GMT

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டன.

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 173 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் கருப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.122.09-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.169.72-க்கும், சிவப்பு எள் குறைந்தபட்ச விலையாக ரூ.121.99-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.186.09-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 8 ஆயிரத்து 231-க்கு ஏலம் போனது.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களான தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 25 ஆயிரத்து 45 தேங்காய்களை கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.20.19-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.66-க்கும் என மொத்தம் 10 ஆயிரத்து 311 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 126 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் கொப்பரை தேங்காய் 129 மூட்டைகள் வந்தன. இதில் முதல் தர கொப்பரை தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.73.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.29-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.50.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.73.10-க்கும் என மொத்தம் 3 ஆயிரத்து 890 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் 2 லட்சத்து 81 ஆயிரத்து 309 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டையை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 8 ஆயிரத்து 389 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டது. இதில் சிறிய தேங்காய் ரூ.5.09-க்கும், பெரிய தேங்காய் ரூ.13.21-க்கும் என மொத்தம் ரூ.67 ஆயிரத்து 476-க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் 56 மூட்டைகள் கொண்டுவரப்பட்டது. இது (குவிண்டால்) ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 489-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 469-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 530-க்கு விற்பனையானது.

மக்காச்சோளம்

நெல் 45 மூட்டைகள் கொண்டுவரப்பட்டது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.1,298-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 94-க்கும் என மொத்தம் ரூ.62 ஆயிரத்து 729-க்கு விற்பனையானது. நிலக்கடலை 30 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. இது குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.6 ஆயிரத்து 01-க்கும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 359-க்கும் என மொத்தம் ரூ.47 ஆயிரத்து 67-க்கு விற்பனையானது. எள் 12 மூட்டை கொண்டு வரப்பட்டது இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.13 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 269-க்கும் என மொத்தம் ரூ.97 ஆயிரத்து 569-க்கு விற்பனையானது. மக்காச்சோளம் 17 மூட்டைகள் கொண்டுவரப்பட்டது இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து 26-க்கும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 27-க்கும் என மொத்தம் ரூ.33 ஆயிரத்து 277-க்கு விற்பனையானது. ராகி 3 மூட்டைகள் கொண்டுவரப்பட்டது இது சராசரியாக ரூ.2 ஆயிரத்து 569-க்கும் என மொத்தம் ரூ.7 ஆயிரத்து 206-க்கு விற்பனையானது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 128-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்