ராமச்சந்திராபுரத்தில்தி.மு.க. கொடியேற்று விழா
ராமச்சந்திராபுரத்தில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
விளாத்திகுளம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிராம மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட கலையரங்கத்தினை அவர் திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவர் அய்யன் ராஜ் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.