புன்னைநகர் வனதிருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புன்னைநகர் வனதிருப்பதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2022-10-16 18:45 GMT

உடன்குடி:

புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை, காலை 6 மணிக்கு மூலவர், உற்சவர் திருமஞ்சனம், காலை 8 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் அணிவித்த மாலையை வனத் திருப்பதி சீனிவாசபெருமாளுக்கு அணிவித்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கதிருவாராதனை, தளிகை சாத்துமுறை, மதியம் 11 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சகஸ்ஹரநாம அர்ச்சனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு பெருமாள் திரு வீதி உலா கருட சேவை நடந்தது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோவில் நிறுவனர், நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் மகன்கள் ஷிவக்குமார், சரவணன், கோவில் மேலாளர் வசந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்