புதுக்கோட்டையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. கந்தர்வகோட்டையில் அதிகபட்சமாக 37 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி இருந்தது.

Update: 2022-10-10 19:00 GMT

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.

இதேபோல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவிலும் விடிய, விடிய மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

மழையளவு

இந்த நிலையில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் லேசாக மழை தூறிய படி இருந்தது. காலை 11 மணிக்கு மேல் நன்கு வெயில் அடிக்க தொடங்கியது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆதனக்கோட்டை-19, பெருங்களூர்-25, புதுக்கோட்டை-24, ஆலங்குடி-29, கந்தர்வகோட்டை-37, கறம்பக்குடி-21.20, மழையூர்-30, கீழணை-10, திருமயம்-12.20, அரிமளம்-23.60, அறந்தாங்கி-15.20, ஆயிங்குடி-12.60, நாகுடி-17.20, மீமிசல்-15.40, மணமேல்குடி-22.20, இலுப்பூர்-19.60, குடுமியான்மலை-32, அன்னவாசல்-24, விராலிமலை-31, உடையாளிப்பட்டி-21, கீரனூர்-35, பொன்னமராவதி-12.40, காரையூர்-28.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கந்தர்வகோட்டையில் 37 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. குறைந்தபட்சமாக கீழணையில் 10 மில்லி மீட்டர் அளவு பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்