திட்டக்குடி அருகே பெருமாள் கோவிலில் அதிகாரிகள் நன்கொடை வசூலித்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

திட்டக்குடி அருகே பெருமாள் கோவிலில் அதிகாரிகள் நன்கொடை வசூலித்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-09-24 18:45 GMT

ராமநத்தம், 

திட்டக்குடி அருகே உள்ள வெங்கனூரில் கம்ப வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு கிராம மக்களே ஒன்று கூடி 5 தலைவர்களை நியமனம் செய்து வரவு-செலவு கணக்குகளை பார்த்து வந்தனர். இதில் ஒரு தலைவரின் செயல்பாடு சரியில்லை என்று கூறி, அவரை பதவியில் இருந்து கிராம மக்கள் நீக்கியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு பதில் வேறு ஒருவரையும் தலைவராக நியமனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று வெங்கானூர் கம்பபெருமாள் கோவிலுக்கு சென்று பக்தர்கள் தரும் நன்கொடை பணத்தை வசூல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிராம மக்கள் வெங்கனூர் கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். உடனே அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும அதிகாரிகள், கோவிலுக்கு வரும் நன்கொடையை கோவில் தலைவர்களே வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்