பழனிசெட்டிபட்டி, பூதிப்புரத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

தேனி அருகே பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-05-11 18:45 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி, பூதிப்புரம் பேரூராட்சி ஆதிப்பட்டியில் ரூ.62 லட்சம் மதிப்பில் வடிகாலுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி, பாலாஜி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் வடிகாலுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டிடம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பணிகளை துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, செயல் அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்