ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் மரக் கன்று நடும் விழா

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் மரக் கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-10-20 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் உருவான தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் (பொறுப்பு) செல்வகுமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலக ஊழியர்கள் சார்பில் சுத்தம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் தாசில்தார் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் மற்றும் குடும்ப அட்டை பெயர் நீக்கம் சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர்கள் வசந்தகுமார், விஜி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்