ஊட்டியில் கூட்டுறவுத்துறை சங்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் கூட்டுறவுத்துறை சங்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-04-10 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் கூட்டுறவுத்துறை சங்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலம் அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊட்டியில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யனார் பேசியதாவது:-

செங்கற்பட்டு துணைப்பதிவாளர், ஊழியர்களை தரைக்குறைவாக பேசி ஊழியர் விரோத போக்கை கையாண்டு வருகிறார். உயர் அலுவலர்களை இழிவாக பேசி, அவர்களை ஆணைகளை செயல்படுத்தாமல் நிர்வாக பணிகளை முடக்கி வருகிறார். அவர் பணியாற்றிய அனைத்து பகுதிகளிலும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறார்.

ஊட்டியில் கூட்டுறவுத்துறை சங்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இவர் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகளில், இவர் மீது 6 ஒழங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால் தற்போது பணி வரன்முறை செய்யப்படாமல் உள்ளார். இவர் கட்டுப்பாட்டில் உள்ள வீட்சு வசதி கூட்டுறவு சங்கங்களில் தற்போது செயலாட்சியர் பணி நியமனம் செய்யப்படுவதால், சங்கங்களில் நிர்வாக பணியில் பல்வேறு சட்ட சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இவர் உயர் அதிகாரிகள் மீது பல புகார்களை அரசுக்கு தெரிவித்து வரும் நிலையில், இவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். கடந்த மாதம் 4-ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், இவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்