நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரூ.35 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட பராமரிப்பு பிாிவு திறப்பு

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரூ.35 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பராமரிப்பு பிாிவு திறக்கப்பட்டது.

Update: 2022-09-19 15:54 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரூ.35 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பராமரிப்பு பிாிவு திறக்கப்பட்டது.

நாகர்கோவில் ரெயில் நிலையம்

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயில்கள் அங்குள்ள யார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 3 பராமரிப்பு பிரிவுகள் (பிட் லைன்கள்) உள்ளன. இந்த நிலையில் ரூ.35 கோடி செலவில் கூடுதலாக 4 மற்றும் 5 என 2 பராமரிப்பு பிரிவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

5-வது பராமரிப்பு பிரிவு திறப்பு

அதில் 5-வது பராமரிப்பு பிரிவு பணி முடிவடைந்து விட்டது. ஆனால் 4-வது பராமரிப்பு பிரிவு பணிகள் முடியவில்லை. அதைத்தொடர்ந்து 5-வது பராமரிப்பு பிரிவு திறப்பு நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் நடந்தது.

இதற்கு ரெயில் நிலைய மேலாளர் முத்துவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ரெயில்வே வாரியத்தின் உறுப்பினர் மங்களா கலந்து கொண்டு பராமரிப்பு பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் மற்றும பணியாளா்கள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த பராமரிப்பு பிரிவில் இருந்து முதன்முதலில் கன்னியாகுமரி- நிஜாமுதீன் எக்பிரஸ் ரெயிலின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்