1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை துறைமுகத்தில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Update: 2023-08-01 18:45 GMT

நாகை துறைமுகத்தில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் கடற்கரையை கடக்கிறது.

இதனால் இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இதனைத்தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் ேநற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

இதனால் தமிழக கடற்கரை பகுதியில் எந்தவித மாற்றங்களும் இருக்காது துறைமுக அலுலவக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்