முடிவைத்தானேந்தல் அரசு பள்ளியில் விளையாட்டு திடல் மேடை திறப்பு

முடிவைத்தானேந்தல் அரசு பள்ளியில் விளையாட்டு திடல் மேடை திறக்கப்பட்டது.

Update: 2022-11-21 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முப்படை வீரர் வாரியம் முன்னாள் துணைத்தலைவர் கர்னல் சுந்தரம், பாலாஜி சுந்தரம் ஆகியோர் இணைந்து ரூ.2 லட்சம் செலவில் பள்ளிக்கூட விளையாட்டு திடலில் மேடையை அமைத்து உள்ளனர். இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டி இப்ஸிபா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் கலந்து கொண்டு மேடையை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஜெயண்ட் குழும பொறுப்பாளர்கள் ஜெயகிருஷ்ணன், ராஜதுரை, வக்கீல் சொர்ணலதா, தொழில் அதிபர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியை சரவணக்குமார் தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்