ரம்ஜான் விடுமுறையையொட்டி மாத்தூர் தொட்டி பாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ரம்ஜான் விடுமுறையையொட்டி மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

திருவட்டார், 

ரம்ஜான் விடுமுறையையொட்டி மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திற்பரப்பு அருவி

ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று விடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு சென்று சூரியன் உதயமாகும் காட்சியையும் பார்த்து விட்டு திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

ஆனால் அங்கு குறைவான அளவு தண்ணீரே வந்தது. அதிலும் சுற்றுலா பயணிகள் குளித்தனர். பின்னர் அவர்கள் திற்பரப்பு தடுப்பு அணையில் படகு சவாரி செய்தனர். இதனால் படகுத்துறையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

தொட்டி பாலம்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாலத்தில் நடந்து சென்று பரளியாற்றின் இரு கரைகளிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரை நெடிதுயர்ந்து வளர்ந்து பச்சைபசேலென காட்சி தரும் மரங்களை பார்த்து ரசித்தனர்.

நேற்று மதியத்திற்கு மேல் மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் தொட்டி பாலத்தில் வெகு தூரத்துக்கு சுற்றுலா வாகனங்கள் அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்