மணப்பாடு பள்ளியில் மனநலப்பயிற்சி கருத்தாய்வு
மணப்பாடு பள்ளியில் மனநலப்பயிற்சி கருத்தாய்வு நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் மற்றும் மனநலப்பயிற்சி கருத்தாய்வு நடைபெற்றது. முன்னதாக முதுகலை ஆசிரியர் வலன்றின் இளங்கோ வரவேற்று பேசினார். பின்னர் ஆசிரியர் சிலுவை பொன்னாடை போர்த்தினார். பிளஸ்-2 கணிதப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன படிப்பு, எந்த கல்லூரிகளில் படிப்பது? எவ்வகையான போட்டித் தேர்வுகள், எப்படி கலந்து கொள்வது? என்பது பற்றி கருத்தாளர் முத்து ஜெயக்குமார் விளக்கி பேசினார். பிளஸ்-2வரலாறு பிரிவு மாணவ- மாணவிகளுக்கு உளவியலாளர் சேசு மனநல ஆலோசனைகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)அருள் நிகழ்சிக்கு தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் டேனியல், ஜூவன், சிலுவை, சத்தியன், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.