கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
நெல்லை - சென்னை இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயிலுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பா.ஜ.க.வினர், ரோட்டரி கிளப் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பலத்த மழைபெய்த போதிலும், ரெயில் மீது மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இதில் கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் வேங்கடேசன் சென்னக்கேசவன் மற்றும் தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.