கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது. இந்த நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.

Update: 2023-04-29 21:15 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.30 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது. இந்த நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.

நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,445 மூட்டைகளில் நாட்டு சர்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 1,180 மூட்டை நாட்டு சர்க்கரை மட்டுமே விற்பனை ஆனது.

ரூ.30 லட்சம்

இதில் முதல் தர திடம் ரக நாட்டு சர்க்கரை (60 கிலோ) மூட்டை ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 600-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 615-க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 430-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 530-க்கும் விற்பனை ஆனது. நாட்டு சர்க்கரை மொத்தம் ரூ.29 லட்சத்து 98 ஆயிரத்து 35-க்கு ஏலம் போனது. இந்த நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகமே கொள்முதல் செய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்