கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

Update: 2023-08-01 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் புவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 5 மணியளவில் ஏராளமான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் கோஷமிட்டவாறு மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்