இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் 'உணவு பிரசாதம்'

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் ‘உணவு பிரசாதம்’ வழங்கப்படுகிறது.

Update: 2022-11-01 18:49 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலி காட்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் தினமும் புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்பட ஒவ்வொரு வகையிலான உணவு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், முருகேசன், கோவில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்