கோபி, தாளவாடியில் 38 விநாயகர் சிலைகள் கரைப்பு

கோபி, தாளவாடியில் 38 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Update: 2023-09-19 21:56 GMT

கடத்தூர்

கோபி, தாளவாடியில் 38 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.

கோபி

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 17 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விநாயகர்கள் சிலைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்காக விநாயகர்கள் சிலைகள் அனைத்தும் கோபி கரட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு- சத்தி ரோடு, கடைவீதி, மார்க்கெட் வீதி, வாய்க்கால் ரோடு, வழியாக நஞ்சை புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் 17 விநாயகர் சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டன.

இதையொட்டி கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாளவாடி

இதேபோல் தாளவாடியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 21 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 21 விநாயகர் சிலைகளும் எடுத்து வைக்கப்பட்டு ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாய்பாபா கோவில் நிறுவனர் மகேஷ்வரானந்தபுரி சாமி  கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தாளவாடி நேதாஜி சர்க்கிள் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க ஆற்றுப்பாலம், பூஜேகவுடர் வீதி, பஸ் நிலையம், ஒசூர் ரோடு, சாம்ராஜ் நகர் ரோடு, கனகதாசர் வீதி, சத்தியமங்கலம் ரோடு வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்தடு பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு தலமலை ரோட்டில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு உள்ள ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஈரோடு மாவட்ட காவல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்