உர விற்பனை நிலையங்களில்விற்பனை பட்டியல் விவர பலகை

தனியார் உர விற்பனை நிலையங்களில் விற்பனை பட்டியல் விவர பலகை வைக்க வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.

Update: 2023-01-12 18:45 GMT

நாகர்கோவில், 

தனியார் உர விற்பனை நிலையங்களில் விற்பனை பட்டியல் விவர பலகை வைக்க வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.

விற்பனை நிலையங்களில் ஆய்வு

தக்கலை வட்டாரத்தில் தனியார் உர விற்பனை நிலையங்களில் குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஹனி ஜாய் சுஜாதா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் உர விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களிடம் கூறியதாவது:-

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உரம் இருப்பு குறித்து விற்பனை பட்டியல் விவர பலகை இருக்க வேண்டும். பி.ஓ.எஸ். (பாய்ண்ட் ஆப் சேல்) எந்திரத்தில் உள்ள உரங்களுக்கும் உண்மை இருப்பிற்கும் வித்தியாசம் இருக்க கூடாது. அனைத்து உரங்களை வழங்கும் நிறுவனத்தின் விவரங்கள் உர உரிமத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது உர உரிமம் மற்றும் அனைத்து பதிவேடுகளையும் பார்வைக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

உரப்பதுக்கல் கூடாது

அனைத்து விவசாயிகளுக்கும் பட்டியல் வழங்கப்பட வேண்டும். மேலும் உரப்பதுக்கல் குறித்த விவரங்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க நேரிடும். இது குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் அந்தந்த வட்டார உர ஆய்வாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்''

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் ஜோஸ் மற்றும் தக்கலை வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்