எட்டயபுரம்:
எட்டயபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை பிலோமினா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் ராமலட்சுமி, மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை முருகேஸ்வரி, கணேசன் தொகுத்து வழங்கினார். முருக வேணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.