எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-19 18:45 GMT

எட்டயபுரம்:

பருவமழை குறைவு காரணமாக எட்டயபுரம் வட்டாரத்தில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசி போன்ற பயறு வகை பயிர்கள் மஞ்சள் தேமல் நோய் தாக்கி கருகி வருகின்றன.

மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் காரணமாக கதிரில் மணிப்பிடிக்காமல் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் இந்த பயிர்களில் விளைச்சலின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களின் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில உதவிச் செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாலுகா செயலாளர் ரவீந்திரன், தாலுகா தலைவர் வேலுச்சாமி மற்றும் விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை கைகளில் ஏந்தி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள், தாசில்தார் கிருஷ்ணகுமாரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்