எட்டயபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-18 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் நடுவிற்பட்டி, கான்சாபுரம் பஸ் நிறுத்தத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலையில் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நடுவிற்பட்டி, கான்சாபுரம் பேரூந்து நிறுத்தத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும். எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பா.ஜ.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்