எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

Update: 2022-09-20 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தை நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் கிருஷ்ணகுமாரி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் சீத்தாலட்சுமி, முகாம் தலைவர் சுதன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு புது வீடுகள் கட்டுவது தொடர்பாக, கிராமத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாகவும், முகாமை சேர்ந்த மக்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டாவிட்டாலும் ஏற்கெனவே உள்ள வீடுகளை பழுது நீக்கி தந்தாலும் போதும் என தெரிவித்தது தொடர்பாகவும், இரு தரப்புக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பாகவும் மாவட்ட கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதில் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டது. அரசு முடிவு வரும் வரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் ஏதுவும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்