எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பயிர் கடன் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தாலுகா குழு சார்பில் எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா குழு உறுப்பினர் வேல்சாமி தலைமை தாங்கினார். மாநில உதவி செயலாளர் நல்லையா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாலுகா தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.